நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு தவறு என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், பொது வாக்கெடுப்புக்குச் செல்வோம் என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
|
ஜனாதிபதியின் முடிவு சரியானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதியின் முடிவு தவறானது என்று தீர்ப்பு வழங்கினால், உடனடியாக பொதுமக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்புக்குச் செல்வதற்கு ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதியின் முடிவு தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அரச தலைவர் அரசமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார் என்பதால், அவர் பொதுவாக்கெடுப்பைக் கோருவதற்கு முடியாது என்று சில சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், மக்களின் ஆணையே எல்லாவற்றுக்கும் மேலானது என்ற அடிப்படையில் ஜனாதிபதி பொதுவாக்கெடுப்புக்குச் செல்வார் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்னவின் கருத்தும் அமைந்துள்ளது.
|
0 Comments