கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 93ஆவது வயதில் நேற்று (புதன்கிழமை) மாலை காலமாகியுள்ளார்.
இவர் 1989ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆசிரியர் அதிபராக இருந்து மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுவந்துள்ளதுடன் மட்டக்களப்பின் அடையாளமாக கருதப்படும் பாடுமீன் தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டு அதனை உலகுக்கு கொண்டுசென்ற பெருமையினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments