மேன்முறையீட்டுத் தீர்ப்பை ஆட்சேபித்து மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இன்றைய தினமே தீர்ப்பு அறிவிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இதன்படி மஹிந்த தரப்பைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளனர்.
இன்றைய உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் கூடி ஒரு முடிவுக்கு வரவுளதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இதுவரை இருந்துவந்த அரசியல் நெருக்கடி இன்றுடன் சற்றுத் தணியும் நிலை காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
0 Comments