Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம்


(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம் அவர்கள் தனது கடமையை இன்று(11)உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


முன்னாள் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆர். சுகிர்தராஜன் தனது 32 வருடகால கல்விச் சேவையிலிருந்து 60வது வயதில் கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றிருந்த நிலையில் ஆர். சுகிர்தராஜன் அவர்களுக்கு முன்பாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய பின் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளராக செயற்பட்ட துறைநீலாவணையினை சேர்ந்த ந.புள்ளநாயகம் அவர்கள் தற்போது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இவர் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டுமெனவும் இவரே கல்வி நிர்வாக சேவையில் உள்ள சிரேஷ்ர அதிகாரி எனவும் குறிப்பிடபட்ட நிலையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கான நியமனம் தவறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய காலத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் சிறப்பான கல்வி வளர்ச்சியை பெற்றிருந்தது.





Post a Comment

0 Comments