குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரால் மேனுமுறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதன்படி அதன்மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை மறுதினம் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
சிறிலங்கா சனாதிபதியால் நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சரவைக்கு இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவினை ஆட்சேபித்து மஹிந்த தரப்பினர் இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். குறித்த மனுவினை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அதன்மீதான விசாரணைகளுக்காக நாளை மறுதினம் 14ஆம் நாள்வரை ஒத்திவைத்தது.
இதேவேளை பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் மீதான மறு விசாரணை இன்றையை தினம் வந்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சனவரி மாதம் ஒத்திவைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments