Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தீர்ப்பு! வெள்ளி திசை யாருக்கு?

அறுபது அடி கம்பத்தில் ஏறி வித்தைகாட்டினாலும் அடியில் இறங்கித்தானே காசுவாங்கவேண்டும் அது போலவே கடந்த ஒக்டோபர் 26 இல் மைத்திரி செய்த வெள்ளிக்கிழமை குழறுபடி வித்தைகளுக்குரிய பலனை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடியகாலம் வந்திருப்பதாக தெரிகிறது.
அந்தவகையில பார்த்தால் மிகக்கடுமையான அரசியலமைப்பு நெருக்கடியில சிக்கி நொந்து நூடுல்சாக காட்சியளிக்கும் இலங்கைத்தீவுக்கு ஒரு தீர்மானகரமான வாரமாகமாறக்கூடும். ஏனெனில் மைத்திரி கடந்தமாதம் 9 ஆந்திகதி வெள்ளிக்கிழமை அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக அதிரடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்த நகர்வுக்கு எதிராகவும் மற்றும் அந்த அதிரடிக்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பமாகிவிட்டன.
இந்தவழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 7 ஆந்திகதி தீர்ப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெற்றால் மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் அரசியல் தீவிரமான அதகளப்படக்கூடும்.
அவ்வாhன ஒரு வெள்ளிக்கிழமைஅதகளத்தைஉச்சநீதிமன்றநீதிபதிகள் விரும்பாதுவிட்டால் வாரஇறுதிகடந்தபின்னர் எதிர்வரும் திங்களன்று தீர்ப்புவழங்கப்படவும்கூடும்.
இன்று ஆரம்பமான உச்சநீதிமன்ற வழக்கில் பிரதமநீதியரசரசர் நளீன் பெரேரா உட்பட ஏழுநீதியரசர்கள் குழாம் பங்குபற்றுகின்றது. இரண்டுதரப்புசட்டவாளர்களும் தூள்பறக்க வாதப்பிரதிவாதங்களைச் செய்தனர்.
ஒக்டோபர் 26 இல் மகிந்தவை பின்கதவு வழியாக கொலுவேற்றிய மைத்திரி அதன் பின்னர் நடத்திய அழாப்பி ஆட்டத்தக்கு எதிரான எதிர்வினைகள் கடந்தமாத நடுப்பகுதியில் உச்ச நீதிமன்றத்தை மொயத்;துப்பிடித்த கதை நீங்கள் அறிந்த கதை.
மைத்திரியின் அதிரடியான நாடாளுமன்றக்கலைப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள்விடுதலைமுன்னணி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் குடிசார் தரப்புககளும் திபு திபுவென மொத்தம் 13 மனுக்களை தாக்கல் செய்தன.
எதிர்ப்புறத்தே நாமும்விட்டோமா பார் என மகிந்தாவாதிகளும் பதில் மனுக்களை தாக்கல் செய்ததும் இந்த மனுக்களின் மீதான ஆரம்பவிசாரணையில் நாடாளுமன்றகலைப்புக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம் டிசம்பர் 7 இல் இறுதிதீர்ப்பென அறிவித்தது.
இதன்பின்னர் மீண்டும் நாடாளுமன்றம் கூடிய வேளைகளில் எல்லாம் அங்கு இடம்பெற்ற நகர்வுகள் சந்திசிரித்தகதைகளானதும் மிளகாய்த்தூளில் முகம் எரிந்த கதைகளானதும் வேறுவிடயங்கள்.
இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாகும் சட்டஇழுபறியின் அடிநாதமாக சிறிலங்காஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமே உள்ளது.
19 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க மைத்திரி எடுத்த முடிவு தவறு என வாதிகளும் பிரதிவாதிகளும் வாதிடுகின்றனர். இந்த இழுபறியில் எதிர்வரும் வெள்ளியன்று அல்லது அதற்குப்பின்னர் வெளிவரக்கூடிய தீர்ப்புக்குப்பின்னர் அடுத்து என்ன? என்ற ஒரு வினா பிறக்கும்
இதற்கிடையே தனது அமைச்சரவைக்கு எதிராக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலதடைஉத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என அடம்பிடித்த மஹிந்த இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
ஆனால் மகிந்தவின் தனயனான நாமல் இந்தவிடயத்தில் யதார்த்தம் பேசியிருக்கிறார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவால் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நகர்வுகளும் உறைநிலைப்படுத்தப்பட்டதாக இன்று சலித்துக்கொண்ட அவர் மக்களுக்காக தாம் செய்ய முனைந்த விலைவாசி நிவாரண வடைபோச்சே என்றார்.
நாளை மீண்டும் ஒருமுறைகூடவிருக்கும் நாடாளுமன்றத்திலும் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக இன்னொரு அஸ்திரம் பாயுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் நாமலின் டுவிட்டர் கவலை இது.
ஆகமொத்தம் இலங்கைத்தீவு இப்போது முழுமையான ஒரு அரசின்மை நிலைக்குள் சென்றுள்ளது. அரசியல்தளத்தில் உள்ள மைத்திரி மகிந்த ரணில் போன்றவர்களின் செலுத்துதல்கள் ஒருபுறமும்மேன்முறையீட்டுநீதிமன்றம் உச்சநீதிமன்றம் போன்ற நீதித்துறைத்தளத்தின் செலுத்துதல்கள் மறுபுறமுமாக நாற்சந்தி ஐந்துசந்தியென சந்திகளில் முட்டுப்பட்டுக்கிடக்கிறது அந்தத்தீவு.
ரணிலை பிரதமராக இறுதிவரை ஏற்கப்போவதில்லையென்ற மைத்திரியின் பிடிவாதத்தால் நேற்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்திய பேச்சுக்களும் முட்டுச்சந்தில் முட்டிநின்றது.
மைத்திரியின் இந்த பிடிவாதம் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தாலும் விடாக்கண்டனாக செயற்படும் ஐக்கிய தேசிய முன்னணியும் இந்தவிடயத்தில் மீண்டும் மீண்டும் அவருடன் பேச்சைநடத்தவே செய்கிறது
இந்த நிலையில் ஒக்டோபர் 26 இல்மகிந்தவை பிரதமராக்கிய தனது நகர்வு சரியென இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கூட தெரிவித்த மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தையும் ஐக்கிய தேசிய கட்சியையும் ரணில் நாசமாக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணிலை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை எனக்கூறிய அவர் நீண்ட குற்றப்பட்டியலை வாசித்தார்.
இதற்கிடையே நேற்றுமாலை மைத்திரியுடன் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு ஒருசந்திப்பைநடத்தியது. தமிழ்அரசியல் கைதிகளின் விடுதலைதொடர்பாக கலந்துரையாடுவதற்காக என கூறப்பட்ட இந்த சந்திப்பின் இறுதியில் இன்னும் இரண்டு வாரங்களில் தமிழ்அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரு தீர்வு என மைத்திரி உறுதியளித்ததாக் செய்திகளும் வந்தன.
இதேபோலவே தமிழர்களின் இனப்பிரச்சனைத்தீர்வையும் வலியுறுத்தும் வகையில் வரையப்பட்ட புதியஅரசியலமைப்பு வரைவை 2019பிப்ரவரி 4க்கு முன்னர் அதாவது சிறிலங்காவின் சுதந்திரதினத்துக்கு இடையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கரணில்மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம்காணப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த இணக்கத்தை எழுத்துமூலம் பரிமாற இரண்டுதரப்பும் இணக்கியதாகவும் ஏற்கனவே மாவைசேனாதிராஜா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிறிலங்காவின் சமகால அரசியல்நெருக்கடிகளுக்குப் பின்னால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மேற்குலகமும் இருப்பதாக முக்கிய மகிந்தாவாதியான மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் வைத்து புதிய பழி ஒன்றைப்போட்டிருக்கிறார்.
நாட்டின் நெருக்கடி நிலையை தமக்கு சாதகமாக்க முனையும் தமிழர்கள் சமஷ்டிக்கு தூபம்போடுவதாகவும் மஹிந்தானந்தவின் பழிசொல்கிறது.
மஹிந்தானந்தவின் இந்த 007 பாணி கண்டுபிடிப்புகளுக்கு அப்பால்தான் இன்னும் இரண்டுவாரங்களில் தமிழ்அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தீர்வு!2019 பிப்ரவரி 4க்கு முன்னர்புதியஅரசியலமைப்புவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு என 2 விடயங்கள் கொழும்பில் இருந்து இப்போது சொல்லப்படுகிறது.
அது சரி சிறிலங்காவின் அரசியல் அதகளங்களுக்கு இடையேவரக்கூடிய இவ்வாறான உறுதிகளையெல்லாம் தமிழ்மக்கள் நம்பமுடியுமா? நம்பலாமோ இல்லையோ வள்ளுவன் சொன்ன இடுக்கண்வருங்கால் நகுக என்பதை மட்டும் இப்போதைக்கு தமிழர்கள் நினைவுகொள்ளலாம்.

Post a Comment

0 Comments