ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பின் போது உணர்ச்சிவசப்பட்ட ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரமற்ற தன்மையைக் காட்டித் தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொலொன்னறுவை விவசாயப் பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்” என உணர்ச்சிவசப்பட்டு கூறினார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் நாட்டு மக்களுக்கு தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்திவிட்டு, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது பொலொன்னறுவை பண்ணைக்கு செல்வேன் என கூறினார் ” என்று தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments