Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹிட்லராக மாறாமல் செயற்படுங்கள்! மைத்திரிக்கு ரணில் எச்சரிக்கை!!

அரசதலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனா தனது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய செயற்பட முடியாது என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் இணைந்து இன்று அலரி மாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக்குறிப்பிட்ட ரணில் ஹிட்லரரைப் போல் செயற்படாமர் அரசியல் சாசனத்திற்கு அமைய செயற்படுமாறும் மைத்திரி வலியுறுத்தியிருக்கின்றார்.

இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனக்குறிப்பிட்ட ரணில் மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியல் சாசனத்தை மீறி செயற்படும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்

ஜனாதிபதி மைத்திரி மஹிந்தவை பிரதமராக நியமித்தமையானது அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்தேன். அது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதனால் நாடாளுமன்றினை கலைத்தமையும் சட்டவிரோதமானது எனும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தோம். இங்கு அரசியலமைப்பு எனும் ஒரேஒரு பிரச்சினை மாத்திரமே உள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதா? அல்லது அதனை மீறி செயற்படுவா என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு சட்டம் உள்ளது. அவ்வாறான நிலையில் எமது அரசியலமைப்பின்படி நாடாளுமன்றில் பெறும்பாண்மை பலம் உள்ள ஒருவர் மாத்திரமே பிரதமராக நியமிக்கப்பட முடியும்

மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கள் தொடர்பான தனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறி பெருமிதம் வெளியிட்டார்.

Post a Comment

0 Comments