Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் மர்மச் சாவுகள்; இன்றும் ஒரு சடலம்!

மட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலையில் இரவு நேர கடமையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சுமார் 55 வயது மதிக்கத் தக்க சி.சிவசீலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்மமான மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது அன்மைக்காலமாக வாவிகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் மற்றும் பொது இடங்களில் இருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. அத்துடன் ரெயில் விபத்துக்களிலும் அதிகலவானோர் பலியாகி வருகின்றனர் இதில் அதிகமானவை தற்கொலைகள் எனக் கூறப்படுகின்ற போதும் இதற்கான சரியான காரணங்கள் கண்டறியப்படுவதில் மர்மங்கள் தொடர்ந்துகொண்டே செல்கிறது.

Post a Comment

0 Comments