Advertisement

Responsive Advertisement

சற்றுமுன்னர் நீதிமன்றில் சலசலப்பு; மஹிந்த மனுவில் கடும் முட்டுக்கட்டை!

மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் மீயுயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நடத்தும் நீதியரசர்கள் குழுவில் உள்ள நீதியரசர் ஒருவருக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் ஈவா வனசுந்தர என்பவர் அந்த குழுவில் இருப்பதற்கே இந்த ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேபனையை மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த மனுதாரர் தரப்பைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சற்றுமுன்னர் முன்வைத்துள்ளனர்.
நீதியரசர் ஈவா வனசுந்தர மஹிந்த ராஜபக்‌ஷ சார்பானவர் எனக் கருதப்படுவதனாலேயே தீர்ப்பு பக்கச் சார்பாக அமைந்துவிடும் என்ற அடிப்படையில் இந்த ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments