Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அடுத்து என்ன? இன்று ரணிலின் முக்கிய நகர்வு!

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறானது என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று இரவு 7.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு தொடர்பில், உயர் நீதிமன்றம் எடுக்கவுள்ள தீர்ப்பின் அடிப்படையில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments