“உயர் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி. இதன் மூலம் நீதிமன்றம் சுயாதீனமாக தான் செயற்படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.அத்தோடு சட்டத்திற்கு எல்லோரும் சமன் என்றும், சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பே கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் காலத்திலாவது ஜனாதிபதி அரசியலமைப்புக்கும் சட்டத்தினையும் உணர்ந்து செயற்பட வேண்டும். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி. இதன் மூலம் நீதிமன்றம் சுயாதீனமாக தான் செயற்படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)
0 Comments