Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் கௌரவிப்பு நிகழ்வு

செ.துஜியந்தன்

களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் கௌரவிப்பு நிகழ்வு

களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தினால் சாதனை படைத்த இல்லமாணவர்களையும் களுதாவளை ஆரம்பப்பிரிவு வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும் வைத்திய அதிகாரி செல்லத்துரை யோகராஜா ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திரஞானசம்பந்தர் குருகுலத்தின் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் களுதாவளை கிராமத்தைச் சேர்ந்த கல்விச்சமூகம் மற்றம் ஆலயநிர்வாகசபை உறுப்பினர்கள், பொதுநல அமைப்புக்கள் ஆ
கியவற்றின் பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு 38 வருடங்கள் வைத்தியசேவையாற்றி ஓய்வுபெற்றச் செல்லும் களுதாவளை ஆரம்பப்பிரிவு வைத்தியசாலையின் வைத்தியர் செல்லத்துரை யோகராஜா பொன்னாடைபோர்த்தி பாராட்டப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
இதேபோன்று குருகுலத்தில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்களில் கடந்தவருடம் மற்றம் இவ்வருடமும் கல்வி விளையாட்டில் தேசியரீதியில் சாதனைபடைத்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை கறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments