Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் நபர் ஒருவரை கோரமாகப் பலியெடுத்த வெள்ளம்!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வெருகல் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட 30 வயது நிரம்பிய குடும்பஸ்தர் இன்றைய தினம் சடலமாக பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வாகரை பொலிஸாரிடம் வினவியபோது, சடலமாக மீட்கப்பட்ட நபர் 30 வயதுடைய தனபாலசிங்கம் கதீஸ்வரன் எனவும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறினர்.
இவர் வாகரை புளியங்கண்டலடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் திருமணம் முடித்து வெருகல் பிரதேசத்தில் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வந்ததாகவும், கடந்த 08 ஆம் திகதி வெருகலில் உள்ள தனது மனைவியின் வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற வேளையில் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 8ஆம் திகதியிருந்து தேடப்பட்டுவந்த குறித்த நபர் இன்று வெருகல் முட்டுச்சந்து பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிள்ளார் என வாகரைப் பொலீஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments