அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.
இந்த புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முதலில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 14-ந்தேதி சென்னையை நெருங்கும் புயல் தென்கிழக்கு திசையில் புதுச்சேரி நோக்கி நகரும் என்றும் 15-ந்தேதி காலை புதுவை அருகே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்துள்ளன.(15)
0 Comments