Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் முடிவின் விளைவு ஜெனீவாவில் எதிரொலிக்கும்! -பாக்கியசோதி சரவணமுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது எடுத்துள்ள முடிவு, அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கையை பாதிக்கும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை ஆகியன அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானதென்றும், சட்டவிரோதமானதென்றும், ஜனநாயக மீறல் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதனால் பொருளாதாரம், நாட்டின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை என்பன குறைவடைந்துள்ளதென குறிப்பிட்ட பாக்கியசோதி சரவணமுத்து, விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி இதற்கு தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி, அரசியல் ஸ்திரமற்ற நிலையிலுள்ள நாடு என இலங்கை முத்திரை குத்தப்பட்டு, அதனால் நாட்டின் பொருளாதாரம் கீழ்மட்டத்திற்குச் செல்லுமென்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 5 மாதங்களில் கூடவுள்ள ஜெனீவா அமர்வில் இலங்கையின் தற்போதைய நிலை பாதிப்பை ஏற்படுத்துமென்றும், அது இலங்கைக்கு பின்னடைவாக அமையும் என்றும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இதன்போது குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments