மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த நகர்வு தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தநிலையில் இது தொடர்பாக சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேன சர்வஜன வாக்கெடுப்புக்கு ஒன்றை நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது
மைத்திரியின் இந்தத்திட்டம் குறித்து இன்று சிறிலங்கா பிரதமர் பணியகத்தில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தனவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த நடவடிக்கை தொடர்பாக தேவை ஏற்பட்டால் மைத்திரிபாலசிறிசேன சர்வஜன வாக்கெடுப்புக்குச்செல்லத்தயாராக இருப்பதாக லக்ஷமன் யாப்பா அபேவர்தனா கூறியுள்ளார்.
0 Comments