சிறிலங்கா அரசியலில்அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் அரசியல் அதிரடிகளுக்கு காரண கர்த்தாவான அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன நவம்பர் 10 ஆம் திகதியான இன்றைய தினம் சிங்கள பௌத்த மக்களின் புனிதத்தளமான கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று பூஜை வழிபாடுகளில்ஈடுபட்டிருக்கின்றார்.
ஒக்டோபர்27 ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய மைத்ரி அன்றையதினமே புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார்.
இந்தநடவடிக்கையை அடுத்து ஒக்டோபர் 27 ஆம்திகதி நாடாளுமன்றத்தை நவம்பர் 16 ஆம் திகதிவரைஒத்த்வைத்து உத்தரவிட்டார்.
மைத்ரியின்இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் யாப்புக்கும் ஜனநாயகத்திற்கும் முரணானதுஎன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளினாலும் குற்றம்சாட்டப்பட்டபோதிலும், அவற்றை பொருட்படுத்தாத அரச தலைவர்மைத்ரி மஹிந்தவுடன் இணைந்து அமைத்த அரசாங்கத்திற்கான அமைச்சர்களையும் கட்டம் கட்டமாகநியமித்து வந்தார்.
இந்த நாட்டில்பெரும் அரசியல் குழப்பமொன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த குழப்பத்திற்குநாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாகஅழுத்தங்களையும், அவ்வப்போது எச்சரிக்கைகளையும்சிறிலங்கா அரச தலைவருக்கு விடுத்துவந்த நிலையில், அவற்றையும் உதாசீனம் செய்துவந்தசிறிலங்கா அரச தலைவர், முன்னர் உத்தரவிட்டிருந்ததற்கு இரண்டுதினங்களுக்கு முன்னதாக அதாவது நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாகஅறிவித்தார்.
இதனையடுத்துநாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு தேவையான 113 நாடாளுமன்றஉறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள முடியாது அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்சவினால் முடியாது போனதை அடுத்து அவரே பெரும்பான்மைப் பலத்தைநிரூபிப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இணைத்துக்கொள்ளும்முயற்சியில் நேரடியாக ஈடுபட்டிருந்தார்.
தமதுஅணியில் இணைந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் பணமம், அமைச்சுப் பதவியும் தருவதாக மஹிந்த அணிபேரம் பேசி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களையும்சுமத்திவந்தனர்.
எனினும்இதனை மஹிந்த தரப்பினர் நிராகரித்துவந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறியஎட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அத்துரலியே ரத்தன தேரர் தவிர்ந்த ஏனைய ஏழுபேரும் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதேவேளைதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம்வியாழேந்திரனும் மஹிந்த – மைத்ரி அணியில் இணைந்து பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார்.இதற்காக அவருக்கு 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள்உட்பட அனைத்து தமிழ் மக்களும் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளான 11 பிரச்சனைகளைமுன்வைத்து அவற்றை தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மஹிந்த – மைத்ரி அணியில்இணைந்துகொண்டதாக தனது கட்சித் தாவலை நியாயப்படுத்தியிருந்தார்.
இவர்கள்ஒன்பது பேரை இணைத்துக்கொண்ட போதிலும் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு8 ஆசனங்கள் குறைவாக இருந்ததை அடுத்து அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, நேரடியாகவே களத்தில் இறங்கினார்.
இதற்கமையசம்பந்தன் தலைமையிலான 14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்ப, ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐந்து பேரைக் கொண்டிருந்தரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அழைத்துமஹிந்தவிற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்காகபல சலுகைகளை செய்துதருவதாகவம் அரச தலைவரான மைத்ரி அவர்களுடன் பேரம்பேசியிருந்தார். எனினும் மைத்ரியின் பேரங்களை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மையினக்கட்சிகள், மஹிந்தவின் நியமனம் அரசியல்சாசனத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட்டதுடன், மஹிந்தவிற்கு எதிராக நாடாளுமன்றில்வாக்களிப்பதாகவும் உறுதிப்பட தெரியப்படுத்தின.
இதனையடுத்துவேறு வழியின்றி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடகளினதம் எச்சரிக்கைகளையும்கருத்தில்கொள்ளாது நவம்பர் 9 ஆம் திகதியான நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டுபொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார் மைத்ரிபால சிறிசேன.
இந்தஉத்தரவும் தற்போது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குசென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஸ்ரீ தலதாமாளிகைக்கு சென்ற சிறிலங்கா அரசதலைவரை, தியவடன நிலமே பிரதீப் நிலங்கதேல வரவேற்றுமாளிகைக்குள் அழைத்துச் சென்றார்.
சிறிலங்காஅரச தலைவருடன் அவரது காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பி.திசாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர்சரத் ஏக்கநாயக்க ஆகியோரும்கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments