அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கச் செல்லத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து தம்முடன் எந்த தரப்பினரும் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கலைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் அதிகாரிகளின் வேதனம், கொடுப்பனவுகள், எரிபொருள் மற்றும் உணவு முதலான செலவுகள் அடங்களாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 400 அல்லது 500 கோடி ரூபா செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments