ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் கொழும்பில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி பாரிய போராட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஹுனுப்பிட்டி, கங்காராமை விகாரைக்கு அருகில் பேரே எரிக்கு அண்மையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் இந்த தகவலை அறிவித்துள்ளார்.
|
இதேவேளை, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று சிலாபம் முன்னேஸ்வரன் கோவிலில் வேண்டுதல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
|
0 Comments