Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்! - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் குறித்த மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
“ இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முழுமையாக செயற்படும் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அவசியமான தூண்களில் ஒன்று. ஜனநாயக இலங்கையின் நீண்ட நாள் ஆதரவாளர் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் அரசமைப்பை பின்பற்றி தற்போதைய நெருக்கடிகளிற்கு துரித தீர்வை காணவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து ஜேர்மனியும் கவலை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என ஜேர்மனி தெரிவித்துள்ளது.இலங்கையின் இந்த நிலைமையில் அரசமைப்பை மதிப்பதும் ஜனநாயகத்தை மதிப்பதும் மிக முக்கியமானவையாக அமைகின்றன என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments