நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் முழுமையாக ஓரங்கட்டிவிட்டு சர்வாதிகாரியாக செயற்பட்டுவரும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு, லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட துர்பபாக்கியமான நிலமையே ஏற்படும் என்று முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை அகற்றி, மைத்ரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்த முக்கிய தலைமை பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
இதனால் மைத்ரிபால சிறிசேன தான் செய்துவரும் தவறுகளை உடனடியாக சரிசெய்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முக்கியஸ்தரான கலாநிதி தம்பரே அமில தேரர், அவ்வாறு செய்ய அவர் செய்யத் தவறிால், நாட்டின் சுதந்திரத்தை இல்லாது ஒழித்த லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு லிபிய மக்கள் வழங்கிய தீர்ப்பைப் போல் ஒரு நிலை மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்றும் கூறியிருக்கின்றார்.
இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
“கொழும்பில் இருந்து பொலன்னறுவை வரை சகலவற்றுக்கும் தீ வைத்த ஆஞ்சநேயரை போல மைத்திரிபால சிறிசேன என்ற நவீன ஆஞ்சநேயர் எல்லாவற்றுக்கும் தீ மூட்டுக்கின்றார். முதலில் அரசியலமைப்பு என்ற அதி உயர் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு அதற்கு தீவைத்தார். நெறிமுறைகளுக்கு தீவைத்தார். சர்வதேச உறவுகளுக்கு தீவைத்தார். நாட்டில் காணப்பட்ட நல்லிணக்கத்துக்கும் தீவைத்துள்ளார். எந்தவித பிரச்சினையும் இன்றி நாட்டில் நிலவிய ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கி தீ வைத்துள்ளார். இன்னும அதனை நிறுத்தவில்லை தீ வைக்கும் நடவடிக்கை தொடர்கின்றது.
இதேபோலத்தான் லிபியாவில் கடாபி மேற்கொண்ட அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு மக்கள் கடாபிக்கு தகுந்த தீர்ப்பை வழங்கினார்கள். நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை ஒழித்தார் என்பதால் குழிக்குள் மறைந்திருந்த கடாபியை வெளியில் எடுத்து தமது சுதந்திரத்தை கைப்பற்றினர். அந்த வரலாற்றை வாசிக்குமாறு சிறிசேனவிடம் கேட்டுக்கொள்கின்றேன். அரசியலமைப்பின் பக்கங்களில் ஒளிந்துகொண்டுஅடுத்து என்ன செய்வது என பக்கங்களை புரட்டிக் கொண்டுள்ளனர்.” என்றார்.
நாட்டில் இடம்பெறும் அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்களை தடுத்து நிறுத்தி, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துகொள்ள வேண்டுமானால், நாட்டு மக்கள் தமக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளையும், கட்சி அரசியல்களையும் முழுமையாக ஓதுக்கிவைத்துவிட்டு வீதிக்கு இறங்கி போராட முன்வர வேண்டும் என்றும், தம்பர அமில தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
”தற்போது பறிக்கப்பட்டு கொண்டுள்ள ஜனநாயகத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி இந்த யுதத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் ஜனநாயகத்தை பாதுகாபதற்காக போராட்டம் முன்னெடுக்கபடபவுண்டும். இன்று நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் முன்னெக்கப்படுவதை காணமுடிகின்றது. யாரும் ஏற்பாடு செய்யாம்ல இளைஞர் சுயாதீனமாக முறையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முன்னெடுத்த யுதத்தத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும். அதனைவிட பெரிதாக போராடுவேதுடன் வெற்றியடையும் வரை போராட்டத்தில் ஈடுபடவேண்டும். எங்களிடம் ஊடக, பணம் பலம் இல்லை மக்கள் பலம் மட்டுமே உள்ளது. அரசியலமைப்பு முரண்பாடாக செயற்படும் ஆட்சியாளர்களுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிக்கபோவது உறுதி.” என்றார்.
0 Comments