மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியடைந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் தெரிவித்ததாவது,
இன்று எமது நாட்டில், சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகம் நிருபிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மோசமான அரசியல்வாதிகள் இருந்தாலும், மோசமான ஆட்சியாளர் இருந்தாலும். ஜனநாயக்கத்தை பாதுகாப்பதற்கு ஸ்ரீலங்காவில் சந்தரப்பம் உள்ளது என்பதை நாங்கள் இன்று நிரூபித்துள்ளோம்.
சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் உச்ச நீதிமன்றம் என்பன அரசியல் அமைப்பை மதித்து அதற்கு அமைய செயற்பட்டதால், திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட அரசாகமும், அமைச்சரவையும் ஓடி ஓளியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று பெற்ற வெற்றியை அடுத்து, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் ஊடாக மீண்டும் நாட்டு மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். எனவே நாட்டு மக்கள் அமைதியான முறையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments