Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முல்லைத்தீவு நந்திக்கடலில் பல வருடங்களின் பின்னர் நடந்த அரிய நிகழ்வு!


முல்லைத்தீவு நந்நிக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதில் இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்நிக்கடல் ஏரி மழைக் காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்லுவதும் முன்னர் வழக்கமாக இருந்துள்ளது
.

இந் நிலையில் பலவருடங்களின் பின்னர் இம்முறை இயற்கையாகவே அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமகாலத்தில் முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழை காரணமாக நந்நிக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் இன்று அதிகாலை நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து நந்திகடல் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

Post a Comment

0 Comments