ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விடயங்கள் தொடர்பில், அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அரசமைப்புப் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சபாநாயகரால், அந்தக் கடிதத்தினூடாக ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சபாநாயகரின் கடிதம் கிடைத்தவுடன் ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் ,ஜனாதிபதி அரசியலமைப்பின்படியே செயற்பட்டுள்ளார் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவநம்பிக்கை பிரேரணையின் பிரதியொன்றும் மற்றும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக சபாநாயகர் அலுவலகத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments