Advertisement

Responsive Advertisement

அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம்!

இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் என ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை குறித்து அவர் ருவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், “தான் புதிய பிரதமராக முன்மொழிந்த – போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக குற்றம்சாட்டப்படும், முன்னாள் ஜனாதிபதியை முன் கொண்டு வருவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்த மைத்திரிபால சிறிசேனவின், முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இலங்கையிலுள்ள நிறுவனங்கள் வளைகின்றன. ஆனால் உடையவில்லை. அனைத்துலக அழுத்தங்களை அதிகரிக்க வேண்டியது முக்கியம்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments