Advertisement

Responsive Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிப்பு


கடந்தமுறைபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தின்கீழ் போட்டியிடவேண்டும் என மைத்திரி அணியினரும், அவ்வாறு முடியாது, பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின் கீழேயே போட்டியிடவேண்டும் என மஹிந்த அணியினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)

Post a Comment

0 Comments