Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் சர்வதேச தபால் தின நிகழ்வு

சர்வதேச தபால் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கான தபால் தின நிகழ்வு ஒன்று நடைப்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, தேவநாயகம் மண்டபத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் சிறந்த சேவையாற்றிய அஞ்சல் திணைக்களங்களும் மற்றும் சிறந்த முறையில் சேவையாற்றும் தபால் திணைக்கள உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.






கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரெட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக பிரதி அஞ்சல்மா அதிபர் கே.விவேகானந்தலிங்கம், பிரதி அஞ்சல்மா அதிபர் அஸ்லம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட தபால்மா அதிபர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
தபால் ஊழியர்கள் எதிர்கால செயற்பாடுகளை சிறப்பான முறையில் செயற்படுத்தும் வகையிலான வெகுமதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments