மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரை 1958 குடும்பங்களைச் சேர்ந்த 6571 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 541 குடும்பங்களைச் சேர்ந்த 1887 இடம்பெயர்ந்து 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயம், ஊரியன் கட்டு அரச தமிழ் கலவன் பாடசாலை, கட்டுமுறிவு அரச தமிழ் கலவன் பாடசாலை, வம்பிவெட்டுவான் அரச தமிழ் கலவன் பாடசாலை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்ட்டுள்ளனர்.
வாகரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு நேரடி விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யேகேஸ்வரன் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்
கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தொப்பிகல பிரதான வீதிப்போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதையடுத்து இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயந்திரப் படகுச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் கிண்ணையடி மற்றும் பிரம்படித்தீவுகளுக்கிடையே படகுச்சேவை நடைபெற்று வருகிறது. இதேவேளை மினுமினுத்தான்வெளி மற்றும் அக்கிறான ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளதனால் சுமார் 250 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஷகிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜபாபு தெரிவித்தார்.
வடமுனை மற்றும் ஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கூறினார். சித்தாண்டி ஈரளக்குளம் வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகத்தினால் இயந்திரப் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 comments: