இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும், வாக்கெடுப்பை சபையில் நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
|
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம். இலங்கையின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண தாமதிக்காமல் இலங்கை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
|
0 Comments