Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

27 மாணவர்களால் சாதனை படைத்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி!

இன்று வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி மட்டகளப்பு மாவட்டம் வாழைச்சேனை இந்துக்கல்லூரி சாதனை படைத்துள்ளது.
இதன்படி குறித்த பாடசாலையிலிருந்து 27 மாணவர்கள் மாவட்டத்திற்குத் தகுதியான வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
குறித்த மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள்தான் என சித்திபெற்ற மாணவர் ஒருவரின் பெற்றர் எம்மிடம் கூறினார்.
குறிப்பாக தமது பொன்னான நேரத்தை மாணவர்களுக்காக அர்பணித்து பாடசாலை நேரங்களில் மட்டுமன்றி பிற நேரங்களிலும் மேலதிக வகுப்புகளை நடத்திய பல நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர் தமது நன்றிகளைப் பகிர்ந்துள்ளனர்.

Post a Comment

0 Comments