Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று கொழும்பு வருகிறார் பிரித்தானிய அமைச்சர்! - சம்பந்தனையும் சந்திக்கிறார்

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 6ம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட்> சபாநயகர், வெளிவிவகார அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசவுள்ளார். பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தமது இலங்கை விஜயத்தில் நல்லிணக்கம், வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments