Home » » நள்ளிரவுடன் முடிந்த கூட்டு எதிரணியின் சத்தியாக்கிரகம் - வழமைக்குத் திரும்பிய கொழும்பு!

நள்ளிரவுடன் முடிந்த கூட்டு எதிரணியின் சத்தியாக்கிரகம் - வழமைக்குத் திரும்பிய கொழும்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தல‍ைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர் முன்னெடுத்த மக்கள் எழுச்சி பேரணியும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நடவடிக்கை, மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுதல், ஆட்சி மாற்றம், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு வழங்குதல், வெளிநாடுகளுடனான முறையற்ற பொருளாதார ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதிலுமிருந்து கொழும்புக்கு பஸ்களிலும் பிற வாகனங்களிலும் வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நகிரில் விகாரமஹாதேவி பூங்கா, கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி சந்தி, கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானப் பகுதி, கொம்பனித் தெரு சந்தி, மருதானை ஆகிய பகுதிகளிலும் ஒன்று கூடியதுடன் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் தொடர்ந்தும் போராடத்தை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் பின்னர் லோட்டஸ் சுற்றுவட்டத்தை நோக்கி படையெடுத்து அங்கு மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி சத்தயக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து சத்தியக் கிரகப் போராட்டம் இரவு 11 மணியளவல் நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில் கொழும்பில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |