இரவு 10 மணிக்கு முன்னர் பிற மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்த ஏற்பாட்டாளர்கள் மக்களை தடுத்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனை கண்டுகொள்ளாமல் மக்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர். நேற்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியின் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கப் போவதாக மஹிந்த தரப்பினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments