Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ : மோஷன் போஸ்டர் வெளியாகி சில மணி நேரத்தில் சாதனை


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.,

இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் ட்விட்டர் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் வெளியிட்ட சில விநாடிகளிலேயே சென்னை டிரெண்டிங்கிலும், இந்தியா டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது. -(3)

Post a Comment

0 Comments