வவுனியா வடக்கு, நெடுங்கேணி - பட்டிக்குடியிருப்பு பகுதியில், நேற்று யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த விசுவலிங்கம் (வயது 38) என்ற குடும்பஸ்தரே, படுகாயமடைந்துள்ளார். வயலுக்குச் சாப்பாடு கொண்டு சென்ற போதே, அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
0 Comments