Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மன்னார் புதைகுழி மர்மம் - நிர்வாண நிலையில் கொன்று புதைக்கப்பட்டனரா?

மன்னார் சதோச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில், புதைக்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மன்னார் சதொச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் எதிலுமே, அடைகள் மற்றும் அதனைச் சார்ந்த தடயப்பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலேயே, இவ்வாறு சந்தேகம் எழுந்துள்ளது.
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 97 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும், துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்பந்தப்பட்ட எந்தவிதமான தடயப் பொருட்களுமோ கிடைக்கவில்லை. இது அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments