Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

5ஆம் திகதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசாங்கம் அவதானத்தில்


அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 5ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அன்றைய தினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வை நடத்தாது இருப்பது தொடர்பாகவும் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் தமது போராட்டம் வெற்றி பெறுமெனவும் இலட்சக் கணக்கில் மக்கள் கொழும்புக்கு வருவார்கள் எனவும் மகிந்த ஆதரவு அணியினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த போராட்டத்தால் அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லையென அரசாங்கத்தினர் தெரிவித்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments