Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நல்லூர் ஆலய வளாகத்தில் நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருட்டு சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியிறக்கத் திருவிழாவுக்கு நேற்று மாலை இடம்பெற்றது.இதன்போது மாலை மல்லாகம் நீதிவான் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர்.இதன்போது, நீதிவானின் மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் காரின் கண்ணாடியைப் பூட்டவில்லை. அதனைப் பயன்படுத்தி, காரிற்குள் இருந்த நீதிபதியின் அலைபேசி திருடப்பட்டுள்ளது. பூசை வழிபாட்டினை நிறைவு செய்து விட்டு வந்த போதே, காரில் இருந்த அலைபேசி திருடப்பட்டுள்ளதை உணர்ந்த நீதிபதி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், நல்லூர் ஆலய வளாகத்தில் நின்ற இளைஞன் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்த நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(15)

Post a Comment

0 Comments