Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பை ஸ்தம்பிக்கச் செய்த 'மோகன்' கைது!

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நேற்று ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு- பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தல் குடிநீர்த் தொழிற்சாலையை தடை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்துடன், வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து செய்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments