இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி, தன்னைத் தனது தந்தையான மஹிந்த ராஜபக்ச திட்டுவதாக தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ஷ. அரசியல் காரணங்களுக்காக ஒருபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை திட்டியது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான ‘ஜனபலய’ எதிர்ப்பு போராட்டம் எதிர்பார்த்த அளவில் ஒன்றிணைந்த எதிரணிக்கு வெற்றியளிக்கவில்லை. இந்த எதிர்ப்பு போராட்டத்தின் முழுப் பொறுப்பும் நாமல் ராஜபக்ஷ எம்.பியிடமே வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த போராட்டம் வெற்றியளிக்கவில்லை என்பதால், உங்களது தந்தை (முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ) திட்டினாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாமல் எம்.பி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
|
0 Comments