Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐ.நாவில் குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை விடுவிப்பேன்! - ஜனாதிபதி உறுதி

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய பிரகடனம் ஒன்றை செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நிவித்திகலவில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
இம்மாதம் 24 ஆம் திகதி தான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ளேன். பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய பிரகடனம் ஒன்றை செய்ய எதிர்பார்த்திருக்கிறேன். நாட்டில் உள்ள பல்வேறு சவால்கள் அதன்மூலம் தீர்க்கப்படுமென்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments