Home » » இலங்கையில் உண்மையை அறிவதற்காய் நீண்ட காலம் காத்திருக்கும் உறவுகள்! - ஐ.நா குழு

இலங்கையில் உண்மையை அறிவதற்காய் நீண்ட காலம் காத்திருக்கும் உறவுகள்! - ஐ.நா குழு

இலங்கையில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக, அவர்களது குடும்பத்தவர்கள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த ஐக்கிய நாடுகள் குழு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள தனது வருடாந்த அறிக்கையிலேயே ஐநா குழு இதனை தெரிவித்துள்ளது.
காணாமல்போனோர் குறித்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா அலுவலகம் அலுவலகம் செயற்படுவதை உறுதிசெய்யுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த குழு தனது இலங்கைப் பயணத்தின் பின்னர் முன்வைத்த பரிந்துரைகளை கருத்தில்கொள்ளுமாறும் ஐநா குழு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
காணாமல்போகச்செய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மையை அறிவதற்காக அவர்களது உறவினர்கள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்எனவும் ஐநா குழு தெரிவித்துள்ளது.
இது ஐநா பிரகடனத்தின் கீழ் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயம் என தெரிவித்துள்ள ஐநா குழு சர்வதேச சட்டத்தின் கீழ் இதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |