Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்


முல்லைத்தீவு செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் நேற்று மாலை தமது பொருள்களை மூட்டை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, படகுகளையும் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர். அப்போது இரு தரப்பினரிடையேயும் முரண்பாடு ஏற்படும் சூழல் காணப்பட்டது. அதனால் ஆயுதம் தாங்கிய பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் தமிழ் மீனவர்களின் 8 மீன்பிடிவாடிகளும், அங்கிருந்த படகுகள் உட்பட மீன்பிடி உபகரண்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் இடம்பெற்றது.
இந்நிலையில் நாயாற்று பகுதியில் இருந்து வெளிமாவட்ட மீனவர்கள் முற்றுமுழுதாக வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்திலேயே, தமக்கான வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என, நாயாறு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.மீள்குடியேற்ற காலத்திலிருந்து, வெளிமாவட்ட மீனவர்களிடம் தாம் போராடி வருவதாகவும், முல்லைத்தீவு ஏழை மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.(15)31

Post a Comment

0 Comments