Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகிந்த – சந்திரிகா 2020இல் போட்டியிடலாம்?


2020 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்கள் இருக்காது என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவருக்கு மூன்றாவது தடவையாக போட்டியிட முடியாதவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அது கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு பொறுந்தாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் 2020இல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு போட்டியிட முடியுமாக இருக்குமென கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மகிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சட்ட நுனுக்கங்கள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் மகிந்தவை களமிறக்க முடியுமா என கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments