புகையிரத சேவையாளர்கள் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக மலையத்திற்கான புகையிரத சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவத்தார்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக 09.08.2018 அன்று பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
பலர் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து புகையிரதம் இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் மீண்டும் பஸ் நிலையங்களை நோக்கிச்சென்றனர்.
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டன. வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இருந்த தபால் பொதிகள் வேன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதே வேளை புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 09.08.2018 அன்று க.பொ.த உயர்தர பரீட்சைக்கு செல்லவிருந்த மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
எனினும் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பல பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக பாரியளவில் பயணிகள் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகையிரத சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.



0 Comments