பாண் தொண்டைக்குள் சிக்கி 61 வயதான முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.குறிப்பித்த சம்பவத்தில் யாழ்.மறவன்புலவு பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் கணேசபிள்ளை(வயது-61) என்பவரே உயிரிழந்தவராவர்.
குறித்த முதியவர் வழமை போன்று தனது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் போது பாண் வாங்கி வந்துள்ளார். பாணை உண்ட போது திடீரென மயக்கமடைந்துள்ளார். உறவினர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த முதியவரைச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.(15)
0 Comments