Home » » பாடசாலை கல்வி சாரா ஊழியர்களின் வேலை நேரம்

பாடசாலை கல்வி சாரா ஊழியர்களின் வேலை நேரம்

பாடசாலை கல்வி சாரா ஊழியர்களின் வேலை நேரம்  தொடர்பாக சிங்கள மொழியில் வெளியாகியுள்ள 29/2018 ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் வேலை நேரம்(Duty Time ) தொடர்பான அறிவுறுத்தல்கள்.



கல்வியமைச்சினால் 01.08.2018 அன்று வெளியிடப்பட்ட 29.2018 இலக்க சுற்றுநிருபம் 02.08.2018இலிருந்து அமுலுக்குவருகின்றது.

அதன்படி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி நிதி மற்றும் திட்டமிடல் உதவியாளர், பாடசாலை நூலகர், தகவல்தொழினுட்பசேவையாளர், முகாமைத்துவ உதவியாளர், கணணி தரவுபதியுநர், ஆகிய தொழிலைச் செய்கின்றவர்கள் காலை 7.30மணி முதல் மாலை 3.15மணிவரை அதாவது 7மணித்தியாலயம் 45நிமிடங்கள் பாடசாலையில் கடமையாற்றவேண்டும்.

ஆனால் உதவி நூலகர் ஆய்வுகூட உதவியாளர் தொழினுட்ப ஆய்வுகூட உதவியாளர் ஆகியோர் காலை 7மணிக்கு பாடசாலைக்கு சமுகமளித்து மாலை 3மணிவரை கடமையாற்றவேண்டும். அதாவது அவர்களும் 7மணித்தியாலயம் 45நிமிடங்கள் பாடசாலையில் கடமையாற்றவேண்டும்.

இதைவிட நூலக ஊழியர் காலை 7மணிமுதல் மாலை 3.45மணிவரை அதாவது 8மணி 45நிமிடங்கள் கடமையாற்றவேண்டும். அதுபோல ஆய்வுகூட தொழினுட்ப ஆய்வுகூட பாடசாலை மற்றும் சுகாதார தொழிலாளிகள் அனைவரும் காலை 7மணிமுதல் மாலை 3.45மணிவரை அதாவது 8மணி 45நிமிடங்கள் கடமையாற்றவேண்டும்.

வாகன சாரதிகள் காவலாளிகள் காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை 9மணிநேரம் கடமையாற்றவேண்டும்.
இந்த குறித்தநேரத்தினுள் பகல்போசன நேரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விடுதி மேற்பார்வையாளர் உதவி மேற்பார்வையாளர் விடுதி சமையற்காரர்கள் அனைவரும் 24மணிநேரமும் கடமையாற்றவேண்டியவர்கள். எனினும் அதிபரோடு கலந்துரையாடி கடமையை வரையறுத்துக்கொள்ளலாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |