Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ” வர்த்தகர் ஒன்றுகூடல்

எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் )
சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  ” வர்த்தகர் ஒன்றுகூடல் ” நிகழ்வு கடந்த திங்கட் கிழமை மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாப் ஹில்மி சுலைமான் (CEO ,insight institute of Management & Technology ) பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா மார்க்க அறிஞர்கள்வைத்தியர்கள் பொறியியலாளர்கள் திணைக்கள தலைவர்கள் பொலிஸ் அதிகாரிகள்சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள் சட்டத்தரணிகள் ஊடகவியலாளர்கள் சாய்ந்தமருது பிரதேச வர்த்தக பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நிகழ்ச்சிகளை பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும் தொகுத்து வழங்கியதுடன் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் எம்.எப்.அப்துல் பாஸித் நன்றியறிதலையும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வர்த்தக கேந்திர நிலையமான சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் வர்த்தகத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் வாடிக்கையாளர்களின் வசதி கருதி பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இங்கு பலராலும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments