Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

20 வருடங்களுக்கு பின் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான கிழக்கு மாகாணப் பாடசாலைகள்

திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் பெண்களுக்கான எல்லே விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகள் முதல் மூன்று இடங்களையும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளன.
இதனடிப்படையில் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிசன் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினையும், மண்டூர் 13ஆம் பிரிவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், களுதாவளை மகாவித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் களுதாவளை மகாவித்தியாலயம் கடந்த 20 வருடங்களுக்கு பின் இப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
32 பாடசாலைகள் பங்குபற்றிய இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களையும் மட்டக்களப்பு தமிழ் பாடசாலைகள் வெற்றி கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.




Post a Comment

0 Comments